எலக்ட்ரிக் பைக் செக்மென்ட்டில் களம் இறங்க தயாராகும் ஜாவா!
1929-ம் ஆண்டு செக் நாட்டில் தொடங்கப்பட்ட ஜாவா நிறுவனம் 1960-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை தொடங்கியது. 36 ஆண்டுகள் ஜாவா பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. 1996-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை நிறுத்தியது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜாவா பிராண்ட் பெயரில் மீண்டும் விற்பனையை தொடங்கியது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs ஜாவா உங்கள் சாய்ஸ் எது?
இந்நிறுவனத்தின் டாப் மாடல்களான ஜாவா பிராக், ஜாவா பேர்டி டூ, ஜாவா கிளாஸிக் ஆகிய மாடல்கள் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு சிறந்த போட்டியாக அமைந்தது. மேலும் பல மாடல்களை தயாரிக்கும் பணியில் உள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள பி.எஸ் 6 உமிழ்வு விதியின் படி நிறுவனங்கள் பைக்குகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. மேலும் பல புதிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 – புதிய சைலன்ஸர்கள் அறிமுகம்
மாறிவரும் பருவநிலை மாற்றங்கள், பெட்ரோல் உற்பத்தியின் நிலவரம் ஆகியவற்றால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பல நிறுவனங்கள் மின்சக்திக்கு மாறி வருகின்றன.
இதனால் ஜாவா நிறுவனமும் புதிய எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2021-ம் ஆண்டின் நடுவில் ஜாவா நிறுவனம் தனது எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யும்.

