கபிரா கொலிஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

கபிரா மொபிலிட்டி நிறுவனம் கோவாவில் உள்ள ஒரு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்.இந்நிறுவனம் ரூ.46,000 (எக்ஸ்-ஷோரூம் விலை) விலையில் கபிரா கொலிஜியோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கபிரா கொலிஜியோ ஸ்கூட்டர் 250 W சக்தி கொண்ட BLDC ஹப் மோட்டரை கொண்டது, இந்த ஸ்கூட்டர் 1000 Wh லித்தியம்-அயன் பேட்டரியால் இயங்குகிறது. இதனை சார்ஜ் செய்ய 4-6 மணி நேரம் ஆகும், ஒரு முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டரில் 100 கி.மீ தூரம் செல்ல முடியும். அனைத்து மீட்டர்களும் டிஜிட்டலில் உள்ளன, அனைத்து விளக்குகளும் எல்.இ.டி விளக்குகள், டியூப்லெஸ் டயர்கள் கொண்ட அல்லாய் வீல்கள் உள்ளன.

டி.வி.எஸ் ஜுபிடர் vs ஹோண்டா ஆக்டிவா 125 எது பெஸ்ட்?

இந்த ஸ்கூட்டர் அதிக மைலேஜ் தரக்கூடியது, மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜ் தந்தாலும் இதன் அதிகபட்ச வேகம் (டாப் ஸ்பீடு) வெறும் 24 kmph மட்டுமே, குறைந்தது 35-40 kmph வேகம் இருந்தால் சிறப்பாக இருக்கும். (ஒகினவா ஃபிரைஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 50-75 kmph வேகத்தில் செல்லும்.)

இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுகொள்பவர்களுக்கும், அருகில் உள்ள இடங்கள் மற்றும் கடைகளுக்கு சென்று வரவும், கல்லூரி மற்றும் நிறுவன வளாகத்துக்குள் சென்றுவரவும் இந்த ஸ்கூட்டர் பயன்படும். இந்த ஸ்கூட்டர் 4 நிறங்களில், 3 வருட வாரன்டியுடன் கிடைக்கிறது.

 

டயர் பிரஷர் மானிட்டரிங் அமைப்பை காரில் பொருத்துவது எப்படி ?