வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ்க்கான கால அவகாசம் நீட்டிப்பு – டிவிஎஸ்
டிவிஎஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டியின் கால அவகாசத்தை நீடித்துள்ளது.
மந்தமான விற்பனை, பொருளாதார நெருக்கடி இவற்றின் மத்தியிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read : டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ரேஸ் எடிசன்
எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனம், இந்த மோசமான சூழ்நிலையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருக்க முடிந்த வரை முயற்சிப்போம் என டிவிஎஸ் நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடியும் இலவச சர்வீஸ்க்கான கால அவகாசம் தற்போது ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. மேலும் மார்ச் 1 முதல் ஏப்ரல் 31 வரை முடிந்த வாரண்டியையும் ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.
இந்த காலகட்டங்களில் இதுபோன்ற சலுகைகளால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முகநூலில் எங்களை தொடர : Yenthiran
