சிறந்த மைலேஜ் தரும் BS6 பைக்குகள் 2020! லிஸ்ட்ல உங்க பைக் இருக்கா?

பைக் வாங்கும் போது அனைவரும் கேட்கும் முதல் கேள்வி எவ்வளவு மைலேஜ் தரும் என்பது தான். நல்ல மைலேஜ் தரும் பைக்குகள் பணத்தை மிச்சப்படுத்தும். அதிக தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் அதிக மைலேஜ் தரும் பைக்கைத்தான் வாங்க நினைப்பார்கள்.

உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பதிவில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகளை பெட்ரோல், எலக்ட்ரிக் வகைகளில் பிரித்து பட்டியலிட்டுள்ளோம்.

I. பெட்ரோல்:

1.பஜாஜ் சி.டி 110

மைலேஜ் : 104 kmpl
பி.எஸ் 6 பஜாஜ் சி.டி 110 பைக் 2 வேரியன்டுகளில் கிடைக்கிறது
என்ஜின் : 115.45 சிசி, 8.6 PS, 9.81 என்எம்
1.பஜாஜ் சி.டி 110 இ.எஸ் – ரூ. 62,279 (On-Road Price)
2.பஜாஜ் சி.டி 110 கே.எஸ் – ரூ. 58,925 (On-Road Price)

 

2.ஹீரோ ஸ்பெல்ன்டர் பிளஸ்

மைலேஜ் : 80.6 kmpl
பி.எஸ் 6 ஹீரோ ஸ்பெல்ன்டர் பிளஸ் பைக் 3 வேரியன்டுகளில் கிடைக்கிறது.
என்ஜின் : 97.2 சிசி, 8.01 PS, 8.05 என்எம்
1.ஹீரோ ஸ்பெல்ன்டர் பிளஸ் செல்ப், i3S – ரூ. 76,528 (On-Road Price)
2.ஹீரோ ஸ்பெல்ன்டர் பிளஸ் செல்ப் – ரூ. 73,598 (On-Road Price)
3.ஹீரோ ஸ்பெல்ன்டர் பிளஸ் கிக் – ரூ. 72,177 (On-Road Price)

 

3.பஜாஜ் சி.டி 100

மைலேஜ் : 80 kmpl
பி.எஸ் 6 பஜாஜ் சி.டி 100 பைக் 2 வேரியன்டுகளில் கிடைக்கிறது
என்ஜின் : 102 சிசி, 7.9 PS, 8.34 என்எம்
1.பஜாஜ் சி.டி 100 இ.எஸ் – ரூ. 61,147 (On-Road Price)
2.பஜாஜ் சி.டி 100 கே.எஸ் – ரூ. 52,865 (On-Road Price)

 

4.டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100

மைலேஜ் – 80 kmpl
பி.எஸ் 6 டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 இரண்டு வேரியன்டுகளில் கிடைக்கிறது
என்ஜின் : 99.7 சிசி, 4.4 PS, 6.5 என்எம்
1.டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 ஹெவி டியூட்டி ஐ டச் ஸ்டார்ட் ஸ்பெஷல் – ரூ. 58,688 (On-Road Price)
2.டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 ஹெவி டியூட்டி ஐ டச் ஸ்டார்ட் – ரூ. 55,602 (On-Road Price)

 

5.பஜாஜ் பிளாட்டினா 110 எச்.கியர்

மைலேஜ் : 75 kmpl
என்ஜின் : 110 பைக் – 115.45 சிசி, 8.6 PS, 9.81 என்எம்
1.பஜாஜ் பிளாட்டினா 110 எச்.கியர் – ரூ. 75,805 (On-Road Price)

 

II.எலக்ட்ரிக் பைக்

 

1.ஒகினவா ஃபிரைஸ்
ஒகினவா ஃபிரைஸ் எலக்ட்ரிக் பைக் 2 வேரியன்டுகளில் கிடைக்கிறது.
என்ஜின்: 1000 W, BLDC மோட்டர், 72 V, 45 Ah VRLA பேட்டரி,
சார்ஜிங் நேரம்: 6-8 மணிநேரம்
மைலேஜ் : 200 km/charge
1.ஒகினவா ஃபிரைஸ் பிக் டிஸ்க் – ரூ. 71,490 (On-Road Price)
2.ஒகினவா ஃபிரைஸ் எஸ்.டி.டி – ரூ. 71,490 (On-Road Price)

 

2.ஒகினவா ஐ – ஃபிரைஸ்

ஒகினவா ஐ – ஃபிரைஸ் எலக்ட்ரிக் பைக் 2 வேரியன்டுகளில் கிடைக்கிறது.
என்ஜின்: 2500 W, BLDC மோட்டர், 3.3 KWH லித்தியம்-அயன் பேட்டரி,
சார்ஜிங் நேரம்: 3-4 மணிநேரம்
மைலேஜ்: 200 km/charge
1.ஒகினவா ஐ – ஃபிரைஸ் பிக் டிஸ்க் – ரூ. 1,16,590 (On-Road Price)
2.ஒகினவா ஐ – ஃபிரைஸ் எஸ்.டி.டி – ரூ. 1,08,728 (On-Road Price)

 

3.ரிவோல்ட் ஆர்.வி.400

மைலேஜ் : 150 km/charge
ரிவோல்ட் ஆர்.வி.400 எலக்ட்ரிக் பைக் 2 வேரியன்டுகளில் கிடைக்கிறது.
3000 W, Mid Drive மோட்டர், லித்தியம்-அயன் பேட்டரி
சார்ஜிங் நேரம்: 4.5 மணிநேரம்
1.ரிவோலட் ஆர்.வி. 400 பிரீமியம் – ரூ. 98,999 (On-Road Price)
2.ரிவோலட் ஆர்.வி. 400 பேஸ் – ரூ. 1,03,000 (On-Road Price)

 

4.அல்ட்ரா ஒய்லட் எப்ஃ 77

மைலேஜ் : 130-150 km/charge
அல்ட்ரா ஒய்லட் எப்ஃ 77 – 25000 W, AC மோட்டர், லித்தியம்-அயன் பேட்டரி,
சார்ஜிங் நேரம்: 1 – 1.5 மணிநேரம்
அல்ட்ரா ஒய்லட் எப்ஃ 77 – ரூ. 3,00,000 (On-Road Price)

 

5.ஏதர் 450X

மைலேஜ் : 85 km/charge
ஏதர் 450X எலக்ட்ரிக் பைக் 2 வேரியன்டுகளில் கிடைக்கிறது.
PMSM மோட்டர், 4.4 PS, 26Nm, லித்தியம்-அயன் பேட்டரி,
சார்ஜிங் நேரம்: 4.18 மணிநேரம்
1.ஏதர் 450X (Subscription based) – ரூ. 1,02,000 (On-Road Price)
2.ஏதர் 450X (Upfront) – ரூ. 1,45,000 (On-Road Price)