பியட் லீனீயா 125 S முதல் பார்வை
செயல்திறன் வாய்ந்த என்ஜின் மற்றும் சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட பியட் லீனீயா, பர்பாமான்ஸ் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை சோதனை செய்ய விரும்பினோம், வாருங்கள் பார்க்கலாம்.
பியட் லீனீயா முதன்முதலில் 2009 ல் அறிமுகப்படுத்தப் பட்டபோது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு பேஸ்லிஃபட் மாடல் முக்கிய மாற்றங்களை கொண்டு அறிமுகப் படுத்தப்பட்டது.
எக்ஸ்டீரியர்:
பியேட் ன் நம்பகமான என்ஜின் மற்றும் தரமான பாகங்கள் நிச்சயம் பியட் லீனீயா வின் வல்லமையை பறைசாற்றும். 1.4 லிட்டர் டர்போ சார்ஜுடு டீ-ஜெட் என்ஜின் 125பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. பூண்டோ அபார்த் ல் உபயோகப் படுத்தப்பட்ட அதே என்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புரத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் 125எஸ் ப்பேட்ஜ் மட்டும் ஒட்டப்பட்டுள்ளது.
இன்ட்டீரியர்:
125எஸ் ன் இன்டிரியர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேஸ்லிப்ட் மாடலில் உபயோகப்படுத்தப்பட்ட அதே கருப்பு மற்றும் பழுப்பு வண்ணங்களுடன் சில்வர் மற்றும் பியானோ பிளாக் வண்ணங்கள் ஆங்காங்கே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
செக்மன்டிலேயியே நீளமான காராக இருந்தாலும் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பின் இருக்கையில் மூன்று பேர் அமர்ந்தால் நெருக்கடியாகவே உணர்வீர்கள்.
மேலும் 5 இன்ச் இன்போடேயின்மன்ட் ஸிஸ்டம் புளூடூத், ஏயக்ஸ் மற்றும் யூஎஸ்பி ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. செக்மன்டிலேயியே சிறந்த பூட்ஸ்பேஸ் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
1.4 லிட்டர் டர்போ டீ-ஜெட் பெட்ரோல் என்ஜின் 114பீஎஸ் பவரில் இருந்து 125பீஎஸ் ஆக மேம்படுத்தப் பட்டுள்ளது. 2000 ஆர்பிஎம் ல் 208 என்எம் டார்க்கை வாரி வழங்கும் வல்லமை கொண்டது. அதி சக்தி வாய்ந்த என்ஜினாக இருந்தாலும் அதிர்வுகள் குறைவு என்பது கூடுதல் சிறப்பு. கியர்பாக்சின் கடினத்தன்மை அப்படியே இருந்தாலும் சிறிது மேம்படுத்தப்பட்டு இருப்பது ஆறுதல் தரும். கிளட்ச் பேடலிலும் அதே இறுக்கம் தொடர்கிறது கண்டிப்பாக அசவுகரியத்தை உணர வைக்கும்.
மைலேஜ்:
அராய் சான்றுப்படி, கலவையாக நகர்புறம் மற்றும் நெடுஞ்சாலைகளில் 10-14 கிமீ அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் நடைமுறையில் 10கிமீ அன்னைத்து வகையான சாலைகளிலும் எதிர்பார்க்கலாம்.
சஸ்பெண்சன்:
மேம்படுத்தப்பட்ட சஸ்ப்பேன்சன் குறைந்த வேகத்தில் மிகவும் பிடிப்பான உணர்வை தருகின்றது. அதே சமயம் கரடுமுரடான சாலைகளில் 190 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் பாதுகாப்பான உணர்வை தந்தாலும் மிருதுவான சஸ்ப்பேன்சன்கள் அதிவேகத்தில் தரைப்பிடிப்பு சற்று குறைவதை உணர முடிகிறது.
என்னதான் வலிமையான என்ஜின் மற்றும் கட்டுமான தரத்தை கொண்டிருந்தாலும் விற்பனையில் பெரிய் மாற்றத்தை ஏற்படுத்துவது சற்று கடினம் என்றே கூறலாம், பொறுத்திருந்து பார்ப்போம்.



