புதிய பாடி கிரபிக்ஸ்களுடன் வரவிருக்கும் கேடிஎம் RC 390!!

கேடிஎம், 2017 ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக RC 390, RC 200 மற்றும் RC 125 ஆகிய மாடல்களை புதிய கிராபிக்ஸ்களுடன் அறிமுகப்படுத்த உள்ளது. ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பைக் நிறுவனமான கேடிஎம் சமீபத்தில் நடந்த EICMA மோட்டார் ஷோவில் RC 390 மாடலை புதிய கிராபிக்ஸ் மற்றும் சிறிய இதர மாற்றங்களுடன் காட்சிப்படுத்தியது பைக் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே போல் RC 390 மாடலை தொடர்ந்து அதன் சகோதரர்களான RC200 மற்றும் RC 125 ஆகிய மாடல்களும் இந்த புதிய கிரபிக்ஸ் அப்டேட்களை பெறுகின்றன. இப்புதிய தோற்றத்தில் 2017 RC390 டியூக் பக்காவான லுக்கை பெற்றுள்ளது.

2017-ktm-rc200-with-graphics

கேடிஎம் RC 390 அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. தற்போதைக்கு டிசைனை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லையெனினும் 2018 வாக்கில் நிச்சயம் பெரிய மாற்றங்களுடன் வெளியிடப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

2017-ktm-rc125-with-graphics

மூன்று மாடல்களிலும் புதிய லிவரி சேர்க்கப்பட்டுள்ள நிலையில் RC 200 மாடலில் மட்டும் அண்டர்பெல்லி எக்சாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய மார்கெட்டிற்கு இப்புதிய எக்ஸ்சாஸ்ட் செட்டப் இன்னும் அறிமுகமாகவில்லை. RC 390 மற்றும் RC 200 ஆகிய இரு மாடல்களும் புதிய லிவரி அமைப்புடன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.